articles

img

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏற்படுத்திய துளை

     அமெரிக்காவிலுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று புவியின் வளிமண்டலத்திலுள்ள அயனோஸ்பியர் எனும் பகுதி யில் தற்காலிகமான ஒரு  துளையை ஏற்படுத்தி யுள்ளது. இந்தப் பகுதியானது பூமியிலிருந்து 80-650 கிமீ உயரத்தில் உள்ளது. இங்கு பிளாஸ்மா எனும் நிலையில் எண்ணற்ற எலெக்ட்ரான்கள் மிதந்து கொண்டு இருக்கின்றன.  

    இந்த துளையானது ஜிபிஎஸ் அமைப்பில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடத்தை அறியும் துல்லியத்  தன்மையில் சில அடிகள் தவறு நிகழலாம்.இப்போதைக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை.ஆனால் எதிர்காலத்தில் அதிக ஆற்றல் கொண்ட ராக்கெட்டுகள் ஏவப்படும்போது ஜிபிஎஸ் மீது குறிப்பிடத்தக்க  தாக்கம் ஏற்படுத்தும்.    

    “ராக்கெட் ஏவுதல் சாதாரண நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கிறது. மறு  பயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட்டுகளினால் செலவுகள் குறைவதால் அடிக்கடியும் ஏவப்படுகின்றன. பிற கோள்களுக்கு சரக்குகளை அனுப்புவதற்காக ஆற்றல் வாய்ந்த ராக்கெட்டுகள் உண்டாக்கப்படுகின்றன. இந்தக் காரணிகளினால் வளிமண்டலத்தின் நடுப்பகுதி மற்றும் மேல் பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகும்”என்கிறார் தைவான் நாட்டிலுள்ள பல்கலைக்கழக சார்லஸ் சி.ஹச்.லின்.